Tuesday, January 2, 2018

Islamic Articlesh - Hadees

**

ஹஜ் பயணத்துக்கு முஸ்லிம் பெண்கள் ஆண் துணையில்லாமல் தனியாக செல்வதற்கும், குலுக்கல் முறை இல்லாமல் செல்வதற்கும் ஹஜ் கமிட்டி நிர்வாத்தில் பரிந்துரைத்திருப்பதாகவும் மோடி அறிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்குஎத்தனையோ பிரச்சனைகள் உள்ளன, கல்வி கற்க முடியாத அளவுக்கு பொருளாதார வசதியின்மை, கடும் கஸ்டபட்டு படித்து முடித்தாலும் வேலைவாயப்புகளுக்கான வழியின்மை, இல்லாத 'லவ்ஜிஹாத்' பெயரால் கொலைபழிகள், போன்ற பல பிரச்சினைகளால் அல்லல் படுகின்றனர்.
இதை எல்லாம் தீர்ப்பதற்கு வழி கண்டறியாத பிரதமர் முஸ்லிம் பெண்கள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டிக்கொள்வதுஏன் ?.
பல நாடுகளுக்கு சென்றுள்ளாராம் இந்தியாவில் மட்டும் தான் ஆண் துணையுடன் ஹஜ் செல்ல வேண்டும் என்ற தடை இருப்பதாகக் கூறுகிறார்.
வெளி நாடுகளிலிருந்துஹஜ் செய்ய வரும் பெண்கள் ஆண்துணையுடன் தான் வர வேண்டும் என்று சவுதி அரசாங்கம் தான் சட்டம் இயற்றி உள்ளது, இந்தியா அல்ல.
45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஆண் துணை தேவை இல்லை என்றும் சவுதி அரசாங்கம் சட்டம் இயற்றி உள்ளது. லிங்கை சொடுக்கிப் பார்க்கவும்.
வயதுக்கு கீழ் நிலையில் உள்ள முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவனோ, மஹரத்திற்கு உட்பட்டவர்களோ இல்லாமல் அடுத்த ஊருக்குக் கூட பாதுகாப்புக் கருதி பயணிக்க மாட்டார்கள்.
யார் மோடியிடம் அழுதது பெண்கள் தனித்து ஹஜ் செய்ய வேண்டும் என்று ?
எதனால் மோடி மன்கிபாத்தில் மனம் திறந்தார்..?
சுச்சார் கமிட்டி பரிந்துரையில் வறுமை கோட்டிற்கு கீழ் முஸ்லிம்கள் வாடுவதாகவும், அரசு அவர்களுடைய துயர் துடைக்க முன்வர வேண்டும் என்று வலியுருத்தப்பட்டுள்ளது. இன்றளவும் தமிழகத்தில் பீடி சுற்றும் வேலையிலும், நூல் நூற்கும் வேலையிலும, பாய்; அடிக்கும் வேலையிலும் இரவு-பகலாக பெண்கள் உழைக்கின்றனர். வடநாட்டு நிலை இதை விட மோசமானதாக உள்ளது. இவர்கள் எங்கே ஹஜ் செய்யச் செல்வது ?
இந்தியாவில் உள்ள பல்வேறு மதத்தவர்களில் முஸ்லிம் பெண்கள் மட்டும் கட்டுப்பாடற்று வெளியில் சுற்றுவது கிடையாது, ஆண் துணை இல்லாமல் வெளியில் இறங்குவது கிடையாது, வெளிஊர் பயணிப்பது அறவே கிடையாது.
மேலும் ஒழுக்கத்தை பேணக் கூடியவர்களாகவும், கொள்கைக்கு கட்டுப்பட்டவர்களாகவும் உள்ளனர் இது மோடி வகையறாக்களுக்குப் பிடிக்கவில்லை. இதை உடைத்து வெளியில் கொண்டு வர வேண்டும் என்பது தான் நோக்கம்.
மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் இந்தியாவின் மூளை முடுக்களிலிருந்து ஏமாற்றி கடத்தி வரப்பட்டு சிவப்புவிளக்கு பகுதிகளில் விபச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வரும் அப்பாவி இந்து பெண்களுக்காக என்றாவது மன்கி பாத்தில் மோடி மனம் திறந்ததுண்டா ?
பிரசித்திப் பெற்ற கோயில்களில் இன்று வரை தேவதாசி முறை ஒழிக்கப்படாமல் அப்பாவி ஹிந்து பெண்கள் பக்தர்களுக்கு பயன்படுத்தப்படுவது பற்றி என்றாவது மன்கி பாத்தில் மோடி மனம் திறந்ததுண்டா ?
ரோபோக்களைப் போல், மெஷின்களைப்போல்பல வருடங்களாக பப்ளிக் விபச்சாரத்தில் சித்ரவதை படுத்தப்பட்டுவரும் ஹிந்து பெண்களின் துயர்துடைப்பதற்கு மன்கிபாத்தில் முதலில் மனம் திறக்கட்டும் மோடி, பிறகு முஸ்லிம் பெண்கள் முன்னேற்றத்திற்காக பேச வரட்டும்.
அதற்குள் வாக்குச் சீட்டு முறை அமுல் படுத்தப்பட்டு விட்டால் இருக்கும் இடம் காணாமல் போய் விடுவார் மோடி.
எது தேவை என்று முஸ்லிம் கேட்கிறோமோ அதை தடுக்கிறார், எதை வேண்டாம் என்கிறோமோ அதை திணிக்க நினைக்கிறார்...?















No comments:

Post a Comment