மேற்குறிப்பிட்டவசனத்துக்கு இப்படியொரு வாக்குறுதியை குர்-ஆன் அளிப்பதாக
தவறான விளக்கம் கொடுக்காதீர்கள்.
நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு உதாரனமாக பிர்அவ்னின் மனைவி ஆசியா
ரலியல்லாஹு அன்ஹா என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் (66:11) ஆனால்
அவருடைய கணவன் பிர்அவ்னோ அநியாயக்காரன் என்றும் அல்லாஹ் குர்ஆன்
கூறுகிறான். இங்கே ஒரு கெட்ட ஆணுக்கு நல்ல பெண் கிடைத்திருக்கிறதே!
இதனால் மேலே உள்ள குர்ஆன் வசனத்திற்கு முறன்படுகிறதே? முறன்பட்டால்
மறுக்க வேண்டுமென்றால் இதில் எதை எடுக்க வேண்டும்? எதை மறுக்க வேண்டும்?
மேலும்... நூஹ் & லூத் அலைஹிஸ்ஸலாம் நபிமார்கள் என்று அல்லாஹ் குர்ஆனில்
கூறுகிறான். ஆனால் அவர்களின் மனைவிமார்களோ காஃபிர்கள் என்றும், பாவிகள்
என்றும் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். ஆனால் நல்ல ஆண்களான
நபிமார்களுக்கே கெட்ட பெண்கள் கிடைத்திருக்கிறதே! இங்கேயும் மேலே
பதியப்பட்டுள்ள குர்ஆன் வசனத்திற்கு முறனாக இருக்கிறதே? இதில் எதை எடுக்க
வேண்டும்? எதை மறுக்க வேண்டும்? மேலும் தற்போதுள்ள நடைமுறையிலும் கூட ஒரு
நல்ல பெண்ணுக்கு தீய ஆண்கள் அதாவது தொழுகையில்லாத
குடிகாரன்கள்,வட்டிக்காரர்கள் அமைந்துள்ளார்களே! ஆண்களுக்கும் இதே போன்று
கெட்ட பெண்கள் அமைந்துள்ளார்களே!!! எனவே இக்குர்ஆன் [24:26] வசனம்
நடைமுறை வாழ்விலும் பார்த்தால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றைச்
சொல்கிறதே!!! எனவே இதை மறுக்கத் தயாரா?
கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கு உரியவர்கள் என்ற திருக்குர்ஆன்
வசனத்தினுடைய சொற்றொடரை வைத்துக் கொண்டு அறிவுஜீவிகளைப் போல தவாறாக
விளக்கங்கள் கொடுக்காதீர்கள்.
இதன் பொருள், கெட்ட ஆண்களுக்கு கெட்ட பெண்கள் தான் மனைவியராக அமைவார்கள்
என்பதல்ல. தாங்கள் கெட்டவர்களாக இருந்து கொண்டு தங்களின் மனைவியர்
மட்டும் நல்லவளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதே! உன்னைப் போன்ற
கெட்ட ஆண்களுக்கு கெட்ட பெண்கள் தான் தகுதியானவர்கள் என்ற கருத்தைத் தான்
இவ்வசனம் சொல்கிறது.
கெட்ட செயல் உள்ள உனது மனைவியும் கெட்டவள் என்ற சொல்லுக்கும்,
உன்னிடம் கெட்ட செயல் உள்ளதால் உன் தகுதிக்கு ஏற்றவள் கெட்டவள் தான்
என்பதற்கும் உள்ள வித்தியாசத்தைக்கூட இவர்களுக்கு விளங்கவில்லை.
நல்லவனாக இருக்கும் நீ கெட்ட பெண்ணை மணம் முடிக்காதே என்பதற்கும்
நல்லவனாக உள்ள உன் மனைவி கெட்டவளாக இருக்கிறாளே என்பதற்கும் உள்ள
வேறுபாடும் இந்த அறிவிலிகளுக்குத் தெரியவில்லை.
இந்த வசனத்திற்குச் சில வசனங்களுக்கு முன்பாக இதை தெளிவுபடுத்தும்விதமாக
அல்லாஹ் ஒரு தெளிவான கட்டளையைப் பிறப்பிக்கின்றான்.
விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணை கற்பிப்பவளையோ தவிர
மற்றவர்களை மணந்து கொள்ள மாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம்
செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள். இது
நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது.
அல்குர்ஆன் 24 : 3
ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில்
ஈடுபடுத்தப்படுவார் என்ற கருத்தில் இவ்வசனங்கள் அமையவில்லை. மேற்கண்ட
குர்ஆன் வசனங்கள் இக்கருத்தைக் கூறுவதாக சிலர் மக்களிடம் பிரச்சாரம்
செய்கின்றனர். இவர்களுக்கு நபிகளாரின் வழிகாட்டுதல் குறித்தும்
திருக்குர்ஆன் வசனங்கள் குறித்தும் போதிய அறிவு இல்லை என்பதால் தான்
இப்படி உளறி வருகின்றனர்.
சற்று சிந்தித்தால் இந்த வசனம் இவர்கள் கூறுகின்ற கருத்தைத் தரவில்லை
என்பதை அறியலாம்.
ஒரு விபச்சாரனுக்கு ஒழுக்கமுள்ள பெண் மனைவியாகக் கூடாது. அதே போன்று ஒரு
விபச்சாரிக்கு ஒழுக்கமுள்ள ஆண் கணவனாகக் கூடாது. மாறாக ஆணாக இருந்தாலும்
பெண்ணாக இருந்தாலும் ஒழுக்கமுள்ளவரையே தன்னுடைய வாழ்க்கைத் துணையாக
தேர்வு செய்ய வேண்டும்.
விபச்சாரனுக்கு அவனைப் போன்று விபச்சாரம் செய்யும் பெண்ணே மனைவியாகத்
தகுதியானவள். ஒரு விபச்சாரிக்கு அவளைப் போன்று விபச்சாரம் செய்யும் ஆணே
கணவனாகத் தகுதியானவன் என்ற கருத்தையே இவ்வசனம் கூறுகின்றது.
அதாவது திருமணம் செய்ய நினைப்பவர் எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையைத்
தேர்வு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டலே இவ்வசனத்தில் கூறப்படுகின்றது.
இவ்வசனத்தின் இறுதியில் இடம் பெற்றுள்ள இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை
செய்யப்பட்டுள்ளது என்ற வாசகம் இக்கருத்தை தெளிவாக எடுத்துரைக்கின்றது.
அல்லாஹ் எல்லாம் அறிந்தவன், மிக்க மன்னிப்பவன்.
"நபி வழி வெற்றிக்கு வழி"
No comments:
Post a Comment