Monday, February 20, 2017

Islamic Article












Ldyநபிகள் நாயகம் - ஸல்'s post.
நபிகள் நாயகம் - ஸல்
01. வம்சம்
இஸ்லாமிய மார்க்கத்தின் தந்தை என அழைக்கப்படும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய செல்வப் புதல்வர் இஸ்மாயில் (அலை) அவர்களின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த பன்னிரண்டு ஆண் மக்களில் கைதார் என்பவரின் சந்ததியில் வந்த அத்னானின் வழித்தோன்றல்களேஅத்னானிய அரபியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அத்னான் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் 21 ஆவது தலைமுறை பாட்டனார் ஆவார்.
அத்னானின் மகன் முஅத்திற்குப் பிறந்த நசார் என்பவரின் மூலம் பல வம்சங்கள் உருவாயின. அவ்வம்சத்தில் ஒன்றான முலர் வம்சத்திலிருந்து இல்யாஸ், கைஸ் அய்லான் என்ற இரு குலங்கள் தோன்றின. இவற்றில் இல்யாஸ் குலத்தில் வந்த ஃபஹ்ர் இப்னு மாலிக் இப்னு நழ்ர் இப்னு கினானா என்பவரின் சந்ததியினரே குறைசிகள் ஆவார்கள்.
மக்காவிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்து வந்த மக்களில் குறைஷி குலத்தினரே உயர்ந்த குலமாகக் கருதப்பட்டனர். இக்குறைசிகள் ஸஹ்ம், ஸுமஹ், குசை, அதிய், மக்ஸூம், ஜுஹ்ரா , தைம் என பல குடும்பங்கலாகப்பிரிந்தனர். பிரிந்து கிடந்தவர்களை குஸய்யி இப்னு கிலாப் என்பவர் ஒன்றினைத்தார். குசை குடும்பத்தில் அப்துல் மனாஃப், அப்துத்தார் மற்றும் அஸத் இப்னு அப்துல் உஸ்ஷா என மூன்று வாரிசுகள் இருந்தனர்.
அப்துல் மனாஃபிற்கு ஹாஷிம், அப்துஷ் ஷம்ஸ், முத்தலிப், நவ்ஃபல் என நான்கு ஆண் மக்கள் இருந்தனர். இவர்களில் ஹாஷிம் நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் ஆவார். இவரது பெயராலேயே முஹம்மது நபி (ஸல்) அவர்களின் குடும்பம் ஹாஷிமி குடும்பம் என அழைக்கப்பட்டது.
ஹாஷிமிர்க்கும் அவரது மனைவி ஸல்மாவிற்கும் பிறந்த பிள்ளைகளில் ஒருவரான அப்துல் முத்தலிப் அவர்களின் பேரப்பிள்ளையே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள். ஹாஷிம், முத்தலிப் இப்னு அப்துல் மனாஃப், அப்துல் முத்தலிப் இப்னு ஹாஷிம் ஆகியோர் கஃபாவிற்கு வரும் ஹாஜிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கும் பணியை செய்து வந்ததால் மக்களிடத்தில் நன்மதிப்பும், செல்வாக்கும் பெற்றிருந்தனர்.
முஹம்மத் இப்னு அப்துல்லலாஹ் இப்னு அப்துல் முத்தலிப் இப்னு ஹாஷிம் இப்னு அப்துல் முனாஃப் இப்னு குசை என்பதே நபி (ஸல்) அவர்களின் வம்சாவழித் தொடராகும்.
இவ்வாறாக மிகுந்த பாரம்பரியமிக்க தனது வம்சத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது,
நிச்சயமாக அல்லாஹ் இப்ராஹிமுடைய பிள்ளைகளில் இஸ்மாயீலைத் தேர்வு செய்தான்.இஸ்மாயீலுடைய பிள்ளைகளில் கினானா குடும்பத்தை தேர்வு செய்தான் . கினானா குடும்பத்தில் குறைசியர்களைத் தேர்வு செய்தான். குறைசியர்களில் ஹாஷிமைத் தேர்வு செய்தான். என்று சிறப்பித்துக் கூறினார்கள்...
இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் பெற்றோர் பற்றிய இடுகை
நட்புடன்
மு.சேக் அலாவுதீன்
முத்துப்பேட்டை....






















PUBLISHERM.NajimudeeN. MD,IRI

No comments:

Post a Comment