Saturday, April 16, 2016

Hadees



gb
bismillah.gif
IndonesiaArabicChinaEnglishSpanishFrenchItalianJapanKoreanHindiRussianlogo1.gif ShareShare ::-
- -
-












அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களதுகாலத்தில் என் மனைவியை மணவிலக்குச்செய்துவிட்டேன். அப்போது அவள் மாதவிடாய் காலத்தில்இருந்தாள். ஆகவே- (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அப்போது அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தையிடம்)-"உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து- அடுத்து மறுபடியும் அவளுக்கு மாதவிடாய் ஏற்படும்வரை அவளை(த்தம்மிடமே) விட்டு வைக்கட்டும். பிறகு அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் அவளுடன் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன் அவளை மணவிலக்குச் செய்யட்டும். அல்லது அவளைத் தம்மிடமே (தம் மனைவியாக) வைத்திருக்கட்டும். (மாதவிடாயிலிருந்து தூய்மையடையும்) இந்தக் காலகட்டமே மனைவியரை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் உத்தரவிட்டுள்ள காலகட்டமாகும்" என்று சொன்னார்கள்.இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ்பின் உமர் பின் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்கள்கூறுகிறார்கள்:நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம்-"(மாதவிடாயின் போது சொன்ன) அந்த ஒரு தலாக் என்னவாகும்? (அது நிகழுமா- நிகழாதா?)" என்று கேட்டேன். அதற்கு அவர்கள்- "அதை ஒரு தலாக்காகக் கணித்துக்கொள்ள வேண்டும்" என்றார்கள்.- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் கேட்ட வினாவைப் பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை.[ஹதீஸ் -












-
-
Add to Google :: ShareShare ::
- - - -

-

No comments:

Post a Comment