Tuesday, April 5, 2016

Hadees



gb
bismillah.gif
IndonesiaArabicChinaEnglishSpanishFrenchItalianJapanKoreanHindiRussianlogo1.gif ShareShare ::-
- -
-











அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களதுகாலத்தில் என் மனைவியை (மாதவிடாய் காலத்தில்) மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே- (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினார்கள். அப்போது அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையிடம்-"உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து- அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து அவள் தூய்மையடையும்வரை அவளை (தம்மிடமே) விட்டுவைக்கட்டும். பிறகு அவர் விரும்பினால்- (இரண்டாவது மாதவிடாயிலிருந்து தூய்மையான) பின்னர் தம்மிடமே (தம் மனைவியாக) வைத்திருக்கட்டும். அவர் விரும்பினால் அவளுடன் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன்பாக அவளை மணவிலக்குச் செய்யட்டும். (மாதவிடாயிலிருந்து தூய்மையான) இந்தக் காலகட்டமே மனைவியரை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் (2:228ஆவது வசனத்தில்) அனுமதித்துள்ள ("இத்தா" எனும் காத்திருப்புக் காலத்தைக் கணக்கிட்டுக்கொள்வதற்கு ஏற்ற) கால கட்டமாகும்" என்று சொன்னார்கள்.- நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் மனைவியை- அவர் மாதவிடாயிலிருந்த சமயத்தில் ஒரு தலாக் சொல்லிவிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் அவர்களுக்கு(ப்பின்வருமாறு) கட்டளையிட்டார்கள்:அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். பிறகு மனைவி மாதவிடாயிலிருந்து தூய்மையாகும்வரை தம்மிடமே வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு தம்மிடம் இருக்கும் அவளுக்கு இரண்டாவது முறை மாதவிடாய் ஏற்பட்டு- அதன் பிறகு அந்த மாதவிடாயிலிருந்து அவள் தூய்மையடையும்வரை காத்திருக்க வேண்டும். பின்னர் அவளைத் தலாக் சொல்ல விரும்பினால் அவளுடன் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன் அவள் (மாதவிடாய் காலத்தில் இல்லாமல்)தூய்மையானவளாய் இருக்கும்போது தலாக்சொல்லிக்கொள்ளட்டும்! இதுவே-பெண்களை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் உத்தரவிட்டுள்ள காலமாகும்.இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.அவற்றில் முஹம்மத் பின் ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில்-"அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் இது தொடர்பாகக் கேட்கப்பட்டபோது "நீஉன் மனைவியை ஒரு முறைஅல்லது இரு முறை தலாக் சொல்லிக்கொள்! (அப்போதுதான் அவளை நீ திரும்ப அழைத்துக்கொள்ளலாம்.) இவ்வாறு (நிகழ்ந்தபோது)தான்- (திரும்ப அழைத்துக்கொள்ளுமாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்டார்கள். நீ உன் மனைவியை மூன்று தலாக் சொல்லியிருந்தால்- அவள் வேறொரு கணவனை மணக்காத வரை அவள் உனக்குத் தடை செய்யப்பட்டவளாக ஆகிவிடுவாள். மேலும்- உன் மனைவியை மணவிலக்குச் செய்யும்போது- அல்லாஹ் உனக்கிட்ட உத்தரவிற்கு நீ மாறு செய்தவனாகவும் ஆகிவிடுவாய்" என்று ஒருவரிடம் கூறினார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.[ ஹதீஸ் -













-
-
Add to Google :: ShareShare ::
- - - -

-

No comments:

Post a Comment