Saturday, November 23, 2013

இளமையை திரும்பத்தரும் பப்பாளி பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம்.:










































இளமையை திரும்பத்தரும் பப்பாளி
பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம்.:
பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, போலிக்அமிலம், பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ், இரும்பு ,நார்ச்த்துக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில்தான்உள்ளது 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்து கொண்டால் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம். பப்பாளியின் கனிகள், விதைகள், இலைகள் ஆகியவை மருத்துவகுணம் உடைய பகுதிகள் ஆகும்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
காய்களில் இருந்து பப்பைன் என்னும் புரதங்களை சிதைக்கும் நொதி, கைமோப்பைன், மாலிக் அமிலம், பெக்டின் களிகள், புரதம், சர்க்கரை, அஸ்காரிபிக் அமிலம், தையமின், ரைபோஃளவின், கார்ளப்பசமைன், போன்ற ரசாயனப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
ரத்தசோகையை குணமாக்கும் பப்பாளிப்பழம்:
செரிமான நோய்களை குணப்படுத்துவதோடு மலச்சிக்கல்களைப் போக்கும் ஆற்றல் வாய்ந்தது. இரத்தத்தில் உள்ள அமிலத் தன்மையை அகற்றும், இரத்த சோகை என்னும் நோயை குணப்படுத்தும்.நமது உடலில் காயம்பட்டு வெளியேறுகின்ற இரத்தமானது உடனடியாக உறைவதற்குத் தேவையான என்ஸைம்கள் இப்பழத்தில் அடங்கியுள்ளன. கல்லீரல், மண்ணீரல் நோய்க்கு பப்பாளிப் பழமே சிறந்த உணவாகும்.
வயிற்றுபோக்கு,வாய்வு,நெஞ்சு எரிச்சல்,அல்சர்,சர்க்கரை வியாதி,கண் பார்வை கோளாறுக்கும் பப்பாளி ஒரு சிறந்த மருந்து. பப்பாளிக்காயை சாறு அரைத்துக்குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்.
இளமையோடு வாழ :
தினசரி பப்பாளியை உண்டு வந்தால் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு இளமைப்பொலிவோடு வாழலாம். பப்பாளி தொடர்ந்து 4 வாரங்கள்சாப்பிட்டால் கொழுப்புசத்து 19.2விழுக்காடுகள் குறைகிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
காயங்களை குணமாக்கும் பால்:
பழம் மட்டுமல்ல பப்பாளியில் சுரக்கும் பாலினை காயங்கள் உள்ள இடங்களில் பூசினால் காயம் விரைவில் குணமடையும். இதன் இலையை அரைத்துப் பூசினால் கட்டிகள் உடையும், வீக்கம் வத்தும். தேள் கொட்டிய இடத்தில் பப்பாளியின் விதையை அரைத்துப் பூசினால் விஷம் முறிவு ஏற்படும். இலைகளின் சாறு ஜுரம் நீக்கும். இருதய நோயை குணப்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தி:
பப்பாளி சாப்பிட்டால் பல் சம்மந்தமான குறைநீங்கும். சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்க பப்பாளி சிறந்த மருந்து . நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடலாம். அடிக்கடி பப்பாளி பழத்தினை சாப்பிடுபவர்களுக்கு நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு.



PUBLISHER The fact that Islamic moral values do not yet rule the world must stir all Muslims
I welcome, My Blog Readers Openions. So write your comments and Suggetions any time, below each Posts or Write to my Email - dgptnayd14@yahoo.ca/-

No comments:

Post a Comment