Friday, December 7, 2012

மனசெல்லாம் வலிக்கிறதா?

என்னால் எனது உணர்வுகளைக்கட்டுப்படுத்த முடியவில்லை... எனது
சிந்தனைகளுக்குக ் கடிவாளம் போட முடியவில்லை...இ து பலரது புலம்பலாக
உள்ளது. ஆனால் மனதைக் கட்டுப்படுத்தின ால் இதையும் சமாளிக்கலாமாம்,
சொல்கிறார்கள் உளவியலாளர்கள்.
ஒவ்வொரு மனிதனுமே ஏதாவது ஒரு உணர்வுக்கு அடிமையானவன்தான் . அது ஆணாக
இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. இந்த உணர்வுகளில் ஒன்றுக்கு,
அவன் அல்லது அவள் ஆட்பட்டவராகவே இருக்க முடியும். கோபம், சந்தோஷம்,
துக்கம், ஏமாற்றம் என இந்த உணர்வுகளில் ஏதாவது ஒன்றுக்கு உட்பட்டுத்தான்
வாழ முடியும்.
ஒவ்வொருவரையும் இந்த உணர்வுதான் உந்தித் தள்ளிவழி நடத்துகிறது. ஆனால்
இந்த உணர்வுகளை சமாளித்து, நாம் தடுமாறாமல் இருக்கும்படி பார்த்துக்
கொண்டால் நாம்கீழே விழ மாட்டோம். மாறாக, உணர்வுகளுக்கு முற்றிலும்
அடிமையாகி விட்டால், நாம் தடுமாறிப் போகும் நிலை ஏற்படுகிறது.
சிலருக்கு கோபம் பெரும் பிரச்சினையாக இருக்கும். சிலருக்கு சநதோஷம் சில
வகை சங்கடங்களைத் தரலாம். பலருக்கு ஏமாற்றம் பெரும்கவலையை ஏற்படுத்தலாம்.
ஏமாற்றம் எப்போது வருகிறது.. எதிர்பார்ப்பதால ்தான். எதிர்பார்ப்புகள ்
எங்கு அதிகம் இருக்கிறதோ அப்போது கூடவே ஏமாற்றமும்வந்து நிற்கும்.
எதிர்பார்ப்புகள ் அதிகரிக்கும்போத ு ஏமாற்றத்தின் தாக்கமும் அதிகமாகவே
இருக்கும். எதிர்பார்ப்பே இல்லாமல் இருக்கப் பழகும்போது ஏமாற்றத்தின்
வலியும் குறையும் வாய்ப்புள்ளது.
சரி இப்படி ஒவ்வொரு உணர்வும் நம்மைத் தாக்கும்போது அதிலிருந்து மீளுவது
எப்படி?... இதை எப்படி சமாளிக்கலாம்?.. கீழே விழாமல் ஸ்டெடியாக நிற்பது
எப்படி?... என்ன சொல்கிறார்கள் உளவியலாளர்கள்.. .?
உணர்வுகள் உங்களை தாண்டி போக விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உணர்வுகளை நீங்கள் அடிமையாக்க வேண்டும். உந்தித் தள்ளும் உணர்வுகளுக்குப்
பலியாகி விடாமல் எதிர்த்துப் போராட வேண்டும்.
இதற்கு சில எளிமையான பயிற்சிகள் இருக்கிறது. அதைச் செய்தாலே போதும்
நிச்சயம் பெரும் பலனைப் பெறலாம்.
மன அழுத்தம் வருகிறதா.. கவலையே படாமல் சத்தம் போட்டு பாட்டுப் பாடுங்கள்.
மனசெல்லாம் வலிக்கிறதா... வாய் விட்டு நன்றாக சிரியுங்கள்.
சோர்ந்து போவது போல உணர்கிறீர்களா.. . எங்காவதுபோய் ஜாலியாக சுற்றி
விட்டு வாருங்கள்.
மனதைப் போட்டு ஏதாவது நினைவு உலுக்குகிறதா... சந்தோஷமாக ஒரு படம் பாருங்கள்.
எதையாவது நினைத்து ஏமாற்றமாக உணர்கிறீர்களா.. . அதை சுத்தமாக மறந்து
விட்டு அடுத்த வேலையைப் பார்க்க முயலுங்கள்.
மனிதனின் மூளை மற்றும் மனதை விட மிகப் பெரிய மாஸ்டர் இல்லை என்பது
உளவியலாளர்களின் கருத்து.மூளை சொல்வதை கேட்பதா, மனசு சொல்வதை கேட்பதா
என்ற கேள்வி வரும்போது, கேட்கப்பட்ட கேள்விக்கு நாம் என்ன பதிலளிப்பது
என்பது குறித்துத்தான் நாம் முதலில் கவலைப்பட வேண்டும் என்றும்
இவர்கள்சொல்கிறார்கள்.
நம்மைப் போலவே மற்றவர்களும் சிந்திக்க வேண்டும், நம்மைப் போலவே அவர்களும்
நினைக்க வேண்டும், நம்மைப் போலவே அவர்களும் இருக்க வேண்டும் என்று
நினைப்பதுமுட்டாள்தனம். அந்த எதிர்பார்ப்பே முதலில் பெரும் தவறு என்று
கூறும் உளவியாளர்கள், உங்களைத் தாண்டி உணர்வுகளைப் போக விடாதீர்கள்.
கடிவாளம் போட வேண்டிய இடத்தில் அதைச் செய்தால் மட்டுமே அதிலிருந்து
நீங்கள் தப்பமுடியும் என்றும் அறிவுரைகூறுகிறார்கள்.


--

- - - - -

And Allah Knows the Best!

- - - - -

Published by :->
M NajimudeeN Bsc- INDIA

¤ ¤ ¤ ¤ ¤ ¤ ¤ ¤ ¤ ¤ ¤ ¤ ¤

No comments:

Post a Comment